இராயக்கோட்டையில் சட்டவிரோதமாக சூதாடிய நான்கு பேர் கைது
இராயக்கோட்டையில் சட்டவிரோதமாக சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் இராயக்கோட்டை-சூளகிரி ரோட்டில் கொப்பகரை கள்ளுவண்டி பெருமாள் என்பவரின் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இராயக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிக்கொண்டிருந்த நான்கு நபர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ₹350/- ரூபாய் பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.