கிருஷ்ணகிரி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-07-12 02:30 GMT

பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிக்கானப்பள்ளி, பெத்தாளப்பள்ளி, கங்கலேரி, கூலியம், வெலகலஹள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இன்று (11.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதி (2023 -24) திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மாணவர் விடுதி ரூ.9 இலட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் மாணவர்கள் தங்கும் அறை, சமையல் அறை, கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகள் பழுதுகள் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதையும், தொடர்ந்து பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவு மற்றும் முட்டை வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கங்கலேரி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2022-23 நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பு தடுப்பணை கட்டுமான பணிகளையும், கங்கலேரி ஊராட்சி மாதேப்பட்டி கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு அங்கன்வாடி மையத்தில் சமையல் அறை, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கங்கலேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனாளி திரு.முருகேசன் என்பவரின் விவசாய நிலத்தில் ரூ.8 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் புதியதாக கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மேலும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி திரு.முருகன் என்பவர் ரூ.2 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புதியதாக வீடு கட்டப்பட்டுள்ள பணிகளையும், கூலியம் ஊராட்சி, ஒம்பலகட்டு கிராமத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணிகளையும், வெலகலஹள்ளி ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் பள்ளிகட்டிடங்கள் வர்ணம் பூசப்பட்டுள்ள பணிகள் மற்றும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிட பணிகள் விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும், பள்ளி வளாகங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், ஒன்றியபொறியாளர் சத்தியநாராயணராவ், பணி மேற்பார்வையாளர் சங்கர், அம்பிகா,  கல்பனா, செந்தில், நாகூர் மீரான், கங்கலேரி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், கூலியம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிரமேஷ், வெலகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.மஞ்சு உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News