கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாரப்பட்டி ஏரிக்கரை சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் படி கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 7 கிலோ 300 கிராம் கஞ்சா, ரூ.900 பணத்தை கைப்பற்றினர்.
மேலும் அவர் மீது வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.