ஊத்தங்கரையில் மதுபானம் கடத்தி வந்த 3 பேர் கைது
ஊத்தங்கரையில் மதுபானம் கடத்தி வந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான காட்டேரி பழைய மாட்டு ஆஸ்பத்திரி வழியாக விற்பனைக்காக மதுபானம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஊத்தங்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் அவர்களின் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலிசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 58 லிட்டர் மதுபானம் இருந்தது. மதுபானம் கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள்,₹5,150/- பணம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து மூன்று நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.