மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 237 மனுக்கள்: உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு

Krishnagiri news today - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-08-14 12:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கே.எம்.சரயுதலைமையில் இன்று (14.08.2023) நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 237 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பாகலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.17 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாலூர் மெயின்ரோடு முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வரை சுமார் 300 மீட்டர் அளவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க பாகலூர் ஊராட்சி பொதுமக்களின் பங்களிப்பு தொகை ரூ.5 இலட்சத்து 80 ஆயிரத்திற்கான காசோலையை பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர்  வி.டி.ஜெயராமன் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  ராஜேஸ்வரி, தனித்துனை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்  பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News