பொங்கல் ஆன்லைன் கோலப்போட்டி முடிவுகள் : பரிசு பெற்றோர் விபரம்

இன்ஸ்டாநியூஸ் மற்றும் பென்டகன் நிறுவனம் இணைந்து நடத்திய பொங்கல் பண்டிகை ஆன்லைன் கோலப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.;

Update: 2022-01-30 10:43 GMT

முன்னதாக கோலப்போட்டியில் கலந்துகொண்ட அத்தனை பெண்களுக்கும்  இன்ஸ்டாநியூஸ் மற்றும் பென்டகன் நிறுவனம் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நடுவர் கருத்து :

நடுவராக இருந்து கோலங்களை தேர்வு செய்த கல்லூரி பேராசிரியை, எங்களிடம் கூறும்போது, 'முதலில் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் கோலங்களை தேர்வு செய்வதற்குள் நிறைய கஷ்டப்பட்டேன். எதை விடுவது? எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடித்தது. அவ்வளவு திறமையாக கோலங்களை போட்டிருந்தனர். அவைகளில், பொங்கல் நாளின் கருத்தை வலியுறுத்தும் கோலங்கள், நமது பாரம்பர்ய கலாச்சாரங்களை வலியுறுத்தும் கோலங்கள், அவைகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணம் போன்றவைகளை அடிப்படையாக வைத்து கோலங்களை தேர்வு செய்துள்ளேன்.' என்றார்.

கூடுதலாக 5 ஆறுதல் பரிசு :

நாம் ஏற்கனவே அறிவித்தது போலவே நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அவர் தேர்வு செய்து கொடுத்த முதல் 3 பரிசுகளுக்கான கோலங்கள் மற்றும் ஆறுதல் பரிசு 15 கோலங்களுக்கு வழங்கப்படுகிறது. நாம் ஏற்கனவே அறிவித்திருந்தது 10 ஆறுதல் பரிசு மட்டுமே. ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக கோலங்கள் குவிந்துவிட்டன. நிறைய சிறப்பான கோலங்கள் இருந்ததால் நடுவரிடம் கூடுதலாக 5 ஆறுதல் பரிசு கோலங்களை தேர்வு செய்ய கூறினோம். அதனால், நடுவரும் கூடுதலாக 5 ஆறுதல் பரிசுகளை தேர்வு செய்து கொடுத்தார். ஆகவே, தற்போது 15 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. வெற்றி பெற்றோர் பரிசுகளை எங்கு? எப்படி பெறுவது? என்பதை அவர்களை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு அறிவிக்கப்படும்.

பரிசு விபரம் :

முதல் பரிசு : S. ஜெயஸ்ரீ, குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்.

2-ம் பரிசு : D.ஷண்முகவள்ளி, திருமலைச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டம்.

3-ம் பரிசு : ஹேமலதா, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம்.

ஆறுதல் பரிசுகள் :

1.சந்திரா, அம்மன் நகர், குமாரபாளையம்  

2. D. மகேஸ்வரி, ஏசியன் இன்ஜினியரிங் கல்லூரி, கொண்டம்பாளையம், கோவை.

3. நித்யலட்சுமி, நாணயக்கார தெரு,கும்பகோணம்.

4. A.ராஜசுதா, மங்கலக்கோவில்,வெள்ளாளவிடுதி, புதுக்கோட்டை மாவட்டம்.

5. மௌனிகா, முத்துசாமி லேன், கைக்கோலம் தோட்டம், ஈரோடு.

6. அஷ்டலக்ஷ்மி, உத்தமசோழபுரம்,சூளைமேடு, சேலம்

7.S.சங்கீதா, மேலணிக்குழி, அரியலூர்

8. மல்லிகா, சக்தி சாய், நாகர்கோவில்

9. K. அனுராதா, ஆலயம் பிளாட்ஸ், கே.கே.நகர், சென்னை

10. B.அபிநயா, சங்கரலிங்கபுரம், விளாத்திகுளம், தூத்துக்குடி

11. புஷ்பா, ஈஸ்ட் காலனி, குமாரபாளையம்

12. J.திவ்யராணி, மைதிலி இல்லம்,ஆலங்குளம்,தென்காசி 

13. M.லோகேஸ்வரி, விளாங்காடுபாக்கம், திருவள்ளூர்

14. S.பிரியா, எதிர்மேடு, குமாரபாளையம், நாமக்கல்

15. G. ஸ்ரீதேவி, ராம்நகர், மெய்யனூர், சேலம்

பரிசு பெற்ற அனைவருக்கும் எங்களது இனிய வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கம் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. வெற்றி பெறாதவர்கள் உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள். தோல்விகளே பாடங்கள் ஆகின்றன. உங்கள் இன்ஸ்டாநியூஸ் தளத்துக்குள் வாருங்கள், உங்களுக்கு பிடித்தவைகளை வாசியுங்கள். இன்னும் நாம் இணைந்து பல போட்டிகளில் சந்திக்க உள்ளோம். நெடுந்தொலைவு பயணத்தில் சேர்ந்தே நெடிய பயணம் மேற்கொள்வோம். 

Tags:    

Similar News