கோடநாடு வழக்கு விசாரணை நவ. 26-க்கு ஒத்திவைப்பு
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த கோடநாடு வழக்கு விசாரணை, நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
உதகை மாவட்டம் அமர்வு நீதிமன்றம்
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு, இன்று நீதிபதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
அரசு தரப்பில், இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடந்து கொண்டிருப்பதால், மேலும் காலஅவகாசம் கேட்டனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து வழக்கை, நவம்பர் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.