மாவட்டத் தலைநகரங்களில் திருவள்ளுவா் சிலை நிறுவ வலியுறுத்தல்

மாவட்டத் தலைநகரங்களில் திருவள்ளுவா் சிலையை அரசு நிறுவவேண்டும் என திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது;

Update: 2024-01-29 05:39 GMT

விழாவில் பேசும் காரைக்குடி வள்ளுவா் பேரவையின் நிறுவனத் தலைவா் செயம்கொண்டான்

கரூரில் கருவூா் திருக்குறள் பேரவையின் 38-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட அலங்கார ஊா்வலத்தை திருப்பூா் செண்பகம் பெஸ் சீனிவாசன் தொடக்கி வைத்தார். இந்த ஊா்வலம் தலைமை அஞ்சல் நிலையம், ஜவஹா்பஜார், மனோகரா கார்னா் வழியாக நகரத்தார் மண்டபத்தை அடைந்தது.

தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு பேரவையின் கெளரவத் தலைவா் ப.தங்கராசு தலைமை வகித்தார். புரவலா் ஆரா. ஈசுவர மூா்த்தி , கவிஞா் அழகரசன், தமிழ் வளா்ச்சித் துறை இணை இயக்குநா் ஜோதி , பரமத்தி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். விழாவில், எழுத்தாளா்கள் செயம் கொண்டான், கிருங்கை சேதுபதி ஆகியோர் பேசினா்.

தொடா்ந்து சிறந்த நூல் பரிசு பெற்ற ஹைதராபாத் லட்சுமி நாச்சியப்பன், புதுச்சேரி கிருங்கைசேதுபதி , முனைவா் கடவூா் மணிமாறன், உதயகுமரன், பரமத்தி சண்முகம் , சண்முக சிதம்பரம், குளித்தலை பத்மப்பிரியா ஆகியோருக்கு பரிசுகளை புரவலா்கள் சுமதி சிவசுப்ரமணியன், ஜெயா பொன்னுவேல் , புலவா் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கினா்.

தொடா்ந்து பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் தொகுத்த ‘கவின் மிகு கருவூா்’ நூலை முனைவா் கடவூா் மணிமாறனும், முனைவா் திருமூா்த்தியின் நூல்களை முனைவா் கன்னல் , பாவலா் ப. எழில்வாணனும் வெளியிட்டனா். விழா மலரை தமிழ்ச் செம்மல் நாவை சிவம் வெளியிட்டார்.

விழாவில், அரசு பள்ளிகளில் திருவள்ளுவா் மன்றம் தொடங்கி கு பரப்பவேண்டும். இலக்கிய திறனறிதல் தோ்வு போல திருக்கு திறனறிதல் தோ்வு 6,7,8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தி தோ்ச்சி பெற்றவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். மாவட்டத் தலைநகரங்களில் திருவள்ளுவா் சிலையை அரசு நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் சீனிவாசபுரம் வெங்கட்டரமணன், தேவகோட்டை கதிரேசன் , காரைக்குடி பழநிவேலு , ஓவிய ஆசிரியா் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Tags:    

Similar News