தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம்

கரூர் அரசு கல்வி நிறுவன வளாகத்தில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது;

Update: 2023-10-17 12:14 GMT

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம், இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் சங்கர் வரவேற்றார்.

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கௌசல்யா, குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம், குளித்தலை கிராமியம் இய க்குனர் டாக்டர் நாராயணன், இலங்கை தமிழர் நலன் தனி வட்டாட்சியர் நேரு ஆகியோர் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சட்ட கையேடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News