கரூரில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான முகாம்
கரூரில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான முகாம் நடைபெற்றது.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக அவர்களுக்கு தேவையான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிக்களுக்கு வயது வரம்பை தளர்த்தி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக மனு செய்த பயனாளிகளை (மனநலம், எலும்பு பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு, கண் பிரிவு . குழந்தைகள் நலம், பொது மருத்துவ பிரிவு) மருத்துவ குழுவினர்களால் நேர்காணல் செய்து தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்கு 82 மாற்றுத்திறனாளி பயனாளிகள் விண்ணபித்து கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், டாக்டர்கள் ரமேஷ்பாபு.ஜெகத்ஜனனி, ஹேமலதா, வசந்திமோகன்பாபு, காமாட்சி, முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் விஜயகுமார். சாந்தி, அமுதா ராஜாமணி, துரை, வெங்கடேஷ் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.