கரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28 குவிண்டால் தேங்காய் விற்பனை

கரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28 குவிண்டால் தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-11-22 16:30 GMT

தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு (கோப்பு படம்).

கரூர் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை  கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக் கான ஏலம் நடைபெறுகிறது.இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 459 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.70 ஆயிரத்து 488-க்கு விற்பனையானது.

அதேபோல் 224 குவிண்டால் எடை கொண்ட437-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.60-க்கும், சராசரி விலையாக ரூ.85.99-க்கும் விற்பனையானது.2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.10-க்கும், சராசரி விலையாகரூ.79.39-க்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.

அதேபோல் 11.75 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.78-க்கும், சராசரிவிலையாக ரூ.155.99-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 78ஆயிரத்து 135-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 19 லட்சத்து34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News