கரூரில் மழை! மக்கள் மகிழ்ச்சி!

இரவு 7 மணி தாண்டியதும் கருமேகங்கள் கூடி கரூர் மக்கள் மீது பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தன. சுமார் 30 நிமிடங்கள் வரை மழை நீடித்த நிலையில், மழையில் நனைந்துகொண்டே இதமாக வீடு திரும்பிய வாகன ஓட்டிகளை காண முடிந்தது. குளிர்ந்த காற்றும் இந்த சூழ்நிலையை மேலும் குளிரூட்டியது.

Update: 2023-04-02 08:27 GMT

100 டிகிரியைத் தாண்டி வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் மழை பெய்ததால் கரூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுபோல அவ்வப்போது மழை பெய்து சூட்டைத் தணித்தால் நன்றாக இருக்கும் என்று தங்களது ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை லேசான மழை இருந்தது. கரூர் மக்கள் இந்த வெப்பநிலை மாற்றத்தை உணர்ந்து கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கோடை வெயில் மே மாதம் தான் உச்சத்தில் இருக்கும் என்பார்கள். ஆனால் மார்ச் மாதமே சுட்டெரிக்கும் சூரியனால் நிழலைத் தேடி அலைகிறார்கள் மக்கள். இளநீரும், பதநீரும் விலை அதிகம் என தண்ணீரைக் குடித்தாவது வெப்பத்தை தணிக்கலாம் என்று வீடே கதி என்று கிடைக்கிறார்கள் சிலர்.

வேலைக்கு போயே ஆக வேண்டிய நிலையிலுள்ள ஊழியர்கள் தங்களை எப்படியாவது காப்பாத்தப்பா என்று வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டே எப்படியாவது மழையைக் கொடப்பா என்றே வேண்டுகிறார்கள் போல. அவர்களின் வேண்டுதல் பலித்தது போல மழை மண்ணை நனைத்தது.

கரூரில் நேற்று மாலையிலேயே வெயில் கொஞ்சம் தணிந்து புழுக்கத்தையும் அழுத்தத்தையும் உணரச் செய்தது. இதனால் இன்று மழை இருக்கும் போல என பலரும் வானத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டே கடை விரித்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர்.

கரும்புபால் காரர்களின் கடைகளை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டிருந்தனர். வேலை பார்த்துவிட்டு அலுத்து களைத்து வீடு திரும்பியவர்களும் ஜூஸ் கடைகளை நாடிச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் நேற்று கொஞ்சம் மாற்றம். வானிலை சட்டென்று மாற, தன் துணைக்கு மழையையும் அழைத்துக் கொண்டு மண்ணுக்கு வந்தது வசந்த காற்று.

இரவு 7 மணி தாண்டியதும் கருமேகங்கள் கூடி கரூர் மக்கள் மீது பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தன. சுமார் 30 நிமிடங்கள் வரை மழை நீடித்த நிலையில், மழையில் நனைந்துகொண்டே இதமாக வீடு திரும்பிய வாகன ஓட்டிகளை காண முடிந்தது. குளிர்ந்த காற்றும் இந்த சூழ்நிலையை மேலும் குளிரூட்டியது. 

Tags:    

Similar News