குடிநீர் பிரச்சனை பற்றி திட்டஅறிக்கை- ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்

பொது மக்களின் குடிநீர் பிரச்சனை பற்றி இரண்டு நாட்களுக்குள் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் ஆய்வு கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-20 11:29 GMT

கரூர் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பொது மக்களின் பிரதான தேவையான குடிநீர் பிரச்சனை பற்றி இரண்டு நாட்களுக்குள் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளிடையே பேசினார்.

கரூர் மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இக்கூட்டத்தில் 8 ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 157 ஊராட்சிக்குட்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் இரண்டாவதாக கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட ஆணையர்கள் மற்றும் 11 பேரூராட்சிக்குட்பட்ட செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை ஏற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை முனைப்புடன் செயல்பட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

பொது மக்களின் பிரதான பிரச்சினையான குடிநீர் தேவை குறித்து வரும் காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் பேசினார். மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க வேண்டும் எனவும், அதற்கான திட்ட அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News