கரூர் மாவட்டத்தில் 3,31,582 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

கரூர் மாவட்டத்தில் 3,31,582 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-10 12:50 GMT

நியாயக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கும் கரும்பினை ஆய்வு செய்தார் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

தமிழக மக்கள் அனைவரும் 2024 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

முதலில் பொங்கல் பரிசு ரூ.1000 பெறுவதற்கு ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த நிபந்தனையை தளர்த்தி கடந்த ஆண்டைப்போல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்  என முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீர் என அறிவித்தார்

இந்த அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் தகுதியுள்ள 331582 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.331582000/- (ரூபாய் முப்பத்து மூன்று கோடியே பதினைந்து இலட்சத்து எண்பத்து இரண்டாயிரம் மட்டும்) பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில செயல்பட்டு வரும் 388 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 222 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

டோக்கன் வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் 13.01.2023 முடிய நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் தாந்தோணி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட ஆட்சிமங்கலம் நியாயவிலைக் கடையில் 956 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் துவங்கி வைத்தார். கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் பிச்சைவேலு, கரூர் சரக துணைப்பதிவாளர் ஆறுமுகம் உள்பட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News