பால் வேன் மோதி ஒருவர் பலி!

குமாரசாமி இருசக்கர வாகனத்தில் குளித்தலை - மணப்பாறை சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிரே வந்த பால் வேன் திடீரென்று இவர் மீது மோதியது. இதனால் பைக்கில் வேகமாக வந்துகொண்டிருந்த குமாராசாமி தூக்கி வீசப்பட்டார்.;

Update: 2023-04-02 07:34 GMT

குளித்தலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது பால் வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் தோகை மலை பகுதியைச் சேர்ந்த வரும் குமாரசாமி. 46 வயதான இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று நாமக்கல்லிலிருந்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். தோகை மலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவர் குளித்தலை தாண்டி பயணித்துக் கொண்டிருந்தார்.

எதிர்ப்புறம் அதேசாலையில் பால் வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது.

குமாரசாமி இருசக்கர வாகனத்தில் குளித்தலை - மணப்பாறை சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிரே வந்த பால் வேன் திடீரென்று இவர் மீது மோதியது. இதனால் பைக்கில் வேகமாக வந்துகொண்டிருந்த குமாராசாமி தூக்கி வீசப்பட்டார்.

தூக்கி வீசப்பட்டதில் பறந்து விழுந்த குமாரசாமி தரையில் விழுந்து படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த சிலர் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே, அங்கிருந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வேறு யாரும் அருகாமையில் நெருங்காதவாறு அரணமைத்தனர். அவர்களின் வழக்கமான நடைமுறைகளையும் விசாரணையும் துவங்கி நடத்தினர். உடலைக் கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News