கரூர் அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
கரூர் அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை அருகே, நெய்தலுார் புரசம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 39). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்னுசாமி மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.