‘ஒரு கோடி ரூபாய் பரிசு’ - பொதுமக்களை ஆச்சரியப்படுத்திய போஸ்டர்; கரூரில் போலீசார் விசாரணை

karur news,karur news today- நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற போஸ்டரால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2023-02-26 13:28 GMT

karur news,karur news today - கரூர் மாவட்டத்தில், பொதுமக்களை ஆச்சரியப்படுத்திய போஸ்டர்.

karur news,karur news today-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம்-பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என, கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 43). இவர் கடந்தாண்டு நடந்த கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அதில், அவர் 335 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

அப்போது அவர் மக்களிடம் வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு வைத்து நூதன முறையில் பல்வேறு உறுதி மொழிகளை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது அவரது வார்டில், திமுக சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிட்டு 1596 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் 335 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். கவுன்சிலர் தேர்தலின் போது இவரது தேர்தல் வாக்குறுதி மற்றும் துண்டு பிரசுரங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் கரூர் மாநகராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் வெற்றி பெறும் வார்டு கவுன்சிலர்களுக்கு ரூ.ஒரு கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கரூர் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, ஈரோடு மாவட்ட கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடும் கட்சிகள் சார்பிலும் வாக்காளர்கள் சார்பிலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு பிரச்சாரம் மும்முரமாக நடந்தது. தற்போது தமிழ்நாட்டில் பேசு பொருளாக உள்ள விஷயமே, இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என குறிப்பிடலாம். நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பல்வேறு முக்கிய கட்சிகள் சார்பில், பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல இணையத்திலும் பல்வேறு வீடியோக்கள் பகிரப்பட்டு வைரலானது.

தற்போது, ராஜேஷ் கண்ணன் பெயரில் கரூர் மாநகரம் முழுவதும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த சுவரொட்டியில், இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.ஒரு கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள்: 25-2-2023 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ‘நானும் தமிழர்’ ராஜேஷ் கண்ணன், கரூர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் வெளிவந்த நிலையில், இப்படி ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News