கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
Karur News,Karur News Today- குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர், விஷம் குடித்து உயிரிழந்தார்.;
குடும்பத் தகராறில் விஷம் குடித்தவர் உயிரிழப்பு
Karur News,Karur News Today -குளித்தலை அருகே, கல்லை ஊராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் வடிவேல் வயது 45. இவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு, அதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி அன்று, மீண்டும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. அதனையடுத்து வடிவேல் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை தோகைமலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேல் தாய் ரங்கம்மா அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் விவசாயி காயம்; போலீசார் விசாரணை
குளித்தலை அருகே கண்டியூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துவேல் (76) விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் கடந்த 3 ம் தேதி அன்று கீழ குறப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே தனது சைக்கிளில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி உள்ளது. இதில் முத்துவேலுக்கு காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து முத்துவேல் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டுனரான கோவை மாவட்டம் சங்கனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மீது, குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கரூர், பசுபதிபாளையம் அடுத்துள்ள சணப்பிரட்டி ஒட்டியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கருர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்குசென்ற போலீசார், சோதனை நடத்திய போது, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(வயது 21) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை, பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கோர்ட் ஊழியர் காயம்; போலீசார் விசாரணை
குளித்தலை அருகே, வதியம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல குறப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சுகுணா (34). இவர் குளித்தலை நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி அன்று குளித்தலை கரூர் பழைய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து, மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேல குறப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது இவருக்கு முன்னால் சென்ற பைக் ஒன்று அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் திடீரென வலது புறம் திரும்பி ஸ்கூட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டனர்.
இதில் சுகுணாவிற்கு இடது காலில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். அதனை எடுத்து புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய பெயர் விலாசம் தெரியாத பைக் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.