கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

Karur News,Karur News Today- கரூர் ஆத்தூர் பிரிவில் கஞ்சா விற்ற இருவரை போலீசார், கைது செய்தனர்.;

Update: 2023-05-05 11:35 GMT

 Karur News,Karur News Today- கரூர் மாவட்ட குற்றச்சம்பவங்கள், (மாதிரி படம்)

கஞ்சா விற்ற இருவர் கைது

Karur News,Karur News Today - கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வடிவேல் தலைமையிலான போலீசார் ஆத்தூர் பிரிவு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கரூர் ராமானுஜா் நகரை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 31), வடிவேல் நகரை சேர்ந்த பிரவீன் (25) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த, 2 கிலோ 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

சவரத்தொழிலாளி விபத்தில் உயிரிழப்பு 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொடிங்கால்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது23). இவர் வெள்ளக்கோவிலில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணன் ராஜராஜனை பின்னால் அமர வைத்து வெள்ளக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சித்தலவாய் கடை வீதி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் ராஜராஜன் டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர் ராஜராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிக்கம்பட்டி டிராக்டர் டிரைவர் முருகேசனிடம் (48) விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News