கரூர்; சிமெண்ட் விற்பனை முகவர் திட்டம் - பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
Karur News,Karur News Today- கரூரில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டம் - பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Karur News,Karur News Today- கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் திட்டத்தில் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது,
இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம், விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com. என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.