வரத்து குறைவால் உயர்ந்த தேங்காய் பருப்பு விலை
Karur News,Karur News Today-கரூர் மாவட்ட பகுதியில், வரத்து குறைந்துள்ளதால், தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது.;
Karur News,Karur News Today- கரூர், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு, முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து நன்கு காய வைத்து, கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் அருகாமையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.71-க்கும், சராசரி விலையாக ரூ.81.99-க்கும் விற்பனையானது. நேற்று அதிகபட்ச விலையாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.55.80-க்கும், சராசரி விலையாக ரூ.82.90-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது.