கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
Karur News , Karur News Today - கரூரில் , அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றி, பண மோசடி செய்த 10 பேரை, போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
மது விற்ற 3 பேர் கைது
Karur News , Karur News Today- கரூர் தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகைமலை பஸ் நிலையம் பகுதிகளில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 62), சண்முகம் (52), காவல்காரன்பட்டி டாஸ்மாக் பார் அருகே தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (37) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பணமோசடி செய்த 10 பேர் கைது
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஒருவர், அப்பகுதியில் செயல்படும் தனியார் நிதிநிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த நிதி நிறுவனம் கூறியப்படி அதிக வட்டி தொகை தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் இந்த நிதி நிறுவனம் மீது 25-க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்கள் விஜயகுமார், குணசேகரன், தங்கராசு உள்பட 10 பேரை கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இந்த நிதி நிறுவனத்தில் சுமார் ரூ.3 கோடி வரை பண மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மாமனாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
புலியூர் அருகே உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவரது மகளுக்கும், கட்டளை பகுதியை சேர்ந்த தினேஷ்பாபு (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தினேஷ்பாபுவின் மனைவி கோவில் திருவிழாவிற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து தினேஷ் பாபு தனது மனைவியை அழைத்து வருவதற்காக புரவிபாளையத்திற்கு வந்துள்ளார். அப்போது முருகேசனுக்கும், தினேஷ்பாபுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்பாபு கத்தியால் முருகேசனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசுார் வழக்குப்பதிந்து தினேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் திருடியவர் கைது
கரூர் வெங்கமேடு கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரி பகுதியில் தனது பைக்கை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், பைக்கை திருடியது குளித்தலை அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.