கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க்கப்பட்டது.;
தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வரும் நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவில் நல்ல மழை பெய்தது. ஆனால் நேற்று பகல் முழுதும் மழை இல்லை. இரவில் இருந்து லேசாக மழை சாரல் மழையாக பெய்து கொண்டுள்ளது.
இந்நிலையில், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இன்று கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.