அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி இலவச கால்நடை சிகிச்சை முகாம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற இலவச கால்நடை சிகிச்சை முகாமில் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்;

Update: 2023-11-20 04:36 GMT

இலவச கால்நடை மருத்துவ முகாம் 

கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் 6-ம் நாள் குளித்தலை சரகத்தில் உள்ள செல்லாண்டிபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் பால்வளத்துறை துணைப்பதிவாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், நன்றாக பராமரிக்க வேண்டும் என உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

சங்க உறுப்பினர்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்றனர். அதிக பால் உற்பத்தி செய்த உறுப்பினர், நன்றாக கால்நடை பராமரிப்பு ஆகிய உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் கள அலுவலர்கள் குமார், சதீஷ்குமார், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, ஆவின் உதவி பொது மேலாளர் மருத்துவர் துரையரசன் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்கள் குறித்தும், நோய்கள் வராமல் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் சங்க உறுப்பினர்களுக்கு தனது சிறப்புரையில் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

கால்நடை மருத்துவர்கள் தீபக், அரவிந், நவீன்குமார் கால்நடைகளுக்கு கருத்தரித்தல்,குடல்புழு நீக்கம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கப்பட்டது. சங்க செயலாட்சியர் திரு.ந.முரளி வரவேற்புரையாற்றினார், செயலாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார் , ஆவின் பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News