கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்;

Update: 2023-08-03 04:13 GMT

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது

கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், சின்ன ஆண்டங்கோவில் பகுதியில் உள்ள கிரனைட் கடை, அம்பாள் நகரில் உள்ள வீடு என மொத்தம் 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

செங்குந்தபுரத்தில் உள்ள இளந்தளிர் பைனான்ஸ் நிதி நிறுவனம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News