3 திருமணம் செய்த கல்யாண மன்னன், மகளிர் போலீசில் மாட்டிக்கொண்டார்

கரூரில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபரை, அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-07-31 16:23 GMT

பைல் படம்

கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணிக்கும் (36), கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த சதாசிவம் மகள் ஜோதி முருகேஸ்வரிக்கும் (30) கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு கணவரின் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக ஜோதி முருகேஸ்வரி வசித்து வந்தார். இந்தநிலையில், பிரசவத்திற்காக ஜோதி முருகேஸ்வரி தாய் வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. 3 மாதங்களுக்கு பிறகு குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு ஜோதி முருகேஸ்வரி திரும்பினார்.

3 மாதங்கள் கழித்து ஜோதி முருகேஸ்வரி கரூர் வந்தபோது கணவர் பாலசுப்பிரமணிக்கு நித்யா(26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கேட்டபோது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் முறையாக பதில் அளிக்காமல் அவரை துன்புறுத்தியதால் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன்பிறகு நித்யாவை, பாலசுப்பிரமணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் கடந்த 2017-ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும், இந்த 2 திருமணங்களையும் மறைத்து அவர்களுக்கு தெரியாமல் சுதா(25) என்ற பெண்ணை ஏமாற்றி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாலசுப்பிரமணி 3-வது திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த ஜோதி முருகேஸ்வரி, தன்னை ஏமாற்றியதுடன் மேலும் 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பாலசுப்பிரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.

இப்புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2-வது மனைவி நித்யாவுடன் வசித்த பாலசுப்பிரமணி மற்றும் நித்யா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கரூரில் 3 திருமணம் செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News