கரூர் : மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பில் உயிரிழப்பு

Update: 2020-12-30 11:00 GMT
கரூர் : மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பில் உயிரிழப்பு
  • whatsapp icon

கரூரில் மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்தது கேட்டு தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம் நஞ்சைகாளகுறிச்சியை சேர்ந்தவர் செல்லமுத்து விவசாயி. இவரது 17 வயது மகன் பாலாஜி கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.வீட்டில் இருந்த பாலாஜி மின்சார பொருள்களை பழுது நீக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்லமுத்து மற்றும் உறவினர்கள் பாலாஜியை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு பாலாஜி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை செல்லமுத்து. நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி சரிந்தார். உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே செல்லமுத்து உயிரிழந்தார்.தகவல் அறிந்த சின்னதாராபுரம் காவல் நிலையப் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மகன், தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கரூரில் பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News