குமரியில் ஒரே நாளில் விதிமுறையை மீறிய 1247 பேருக்கு அபராதம் - போலீசார் நடவடிக்கை
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உச்சம் அடைந்தது.
தொடர்ந்து தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1892 ஆக உள்ளது.இதனிடையே ஊராடங்கில் அரசு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.மேலும் மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் சோதனை சாவடிகள் அமைந்துள்ள போலீசார் தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் முக கவசம் அணியாமல் வந்ததாக 1237 பேருக்கும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 10 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.ஊரடங்கை மீறியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.