கன்னியாகுமரியில் தீ விபத்து- 120 கடைகள் நாசம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து நாசம்.பல கோடி ரூபாய் இழப்பு.;

Update: 2021-01-09 09:32 GMT

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காந்தி மண்டபம் அருகில், கடைகளில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல  கடைகள்  பற்றி எரிந்தன.

இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில் குளச்சல், தக்கலை, உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறை வாகனங்கள் வந்தன. தீ பிடித்த போது கடற்கரையில் பலத்த காற்று வீசியது, இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிக நேரம் ஆனது. தீயணைப்பு துறை வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்ப்பட வில்லை, தீ விபத்திற்கு காரணம் ஹோட்டலில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடிப்பா ? அல்லது மின் கசிவு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு மீண்டும் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News