வாலாஜாபாத் அருகே சுற்றுச் சூழல் பாதிப்பு கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல்

வாலாஜாபாத் அருகே மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல் செய்தனர்.;

Update: 2023-01-09 12:18 GMT

வாலாஜாபாத் அருகே இளைஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

திருவெண்கரணை ஊராட்சியில் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகளும் , கம்பெனி கழிவுகளும் கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஓரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இதில் கழிக்கப்படும் அனைத்து வகை கழிவுகளும் உரிய முறையில் அகற்றப்பட வேண்டும் எனவும் , இதேபோல்  இப்பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக இயங்கி வரும் மருத்துவ மனைகளும் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் உள்ளது திருவங்கரனை ஊராட்சி . இந்த ஊராட்சி சுங்குவார்சத்திரம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சில நிறுவனங்கள் தங்களுடைய கழிவுகளையும் மேலும் மருத்துவ கழிவுகளையும் இந்த திருவங்கரனை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டி வருகிறது.

கொட்டி எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்.

இது கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. இவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் இரவு நேரங்களில் எரிக்கப்படுகின்றன. இதனால் திருவங்கரனை பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் சூழ்நிலை மாசடைந்து வருகிறது.

இதன் காரணமாக இங்கு வசிக்கும் மக்களுக்கு அவ்வப்போது  சில உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன .இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் எங்கள் பகுதியில் மருத்துவ கழிவுகளையும் கம்பெனிகளின் கழிவுகளையும் கொட்டக்கூடாது என அந்த ஊரைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.

இருப்பினும் இரவு நேரங்களில் லாரிகளில் கொண்டு வந்து கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மருத்துவக் கழிவுகளை கொட்டக்கூடாது என அழிமின்சேரி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் கிராம மக்களிடம் சமரசம் பேசியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது .இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்ததாக தெரிய வருகிறது.

சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் சுற்றுச்சூழல் அதிகாரிகளும் , மாவட்ட ஆட்சியரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,  இரவு நேரங்களிலேயே இது போன்ற நிலைகளை தனியார் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்வதை கண்டறிந்து காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News