வாலாஜாபாத் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு துவங்கியது

பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளுக்கான வேட்புமனு துவங்கியது.

Update: 2022-01-28 07:45 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1மாநகராட்சியும், வாலாஜாபாத், உத்திரமேரூர், மாங்காடு , குன்றத்தூர் ஆகிய சிறப்பு நிலை பேரூராட்சிகளும் அடங்கியுள்ளது.

15ஆயிரம்  மக்கள் தொகை கொண்ட வாலாஜாபாத்  தேர்வுநிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டுள்ளது. இதில் எஸ்சி, பொது பிரிவிற்கு இரு இடங்களும், பெண்கள் பொது பிரிவிற்கு 5 இடங்களும் , எஸ்சி மகளிருக்கு 3 இடங்களும், பொதுவாக 5 நபர்களுக்கு என இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் தேர்வுநிலை பேரூராட்சியில் 6585 ஆண் வாக்காளர்களும், 7492 பெண் வாக்காளரும், 5 மூன்றாம் பாலித்தனவர் என மொத்தம் 14082 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்குபதிவு செய்ய 10 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 பதட்டமான வாக்குசாவடி என காவல்துறையால் கூறப்பட்டு அங்கு கூடுதல் காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். வாலாஜாபாத் தேர்வுநிலை பேரூராட்சி தலைவராக எஸ்சி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கு  தேர்தல் அலுவலர் பிரேமா  எடுத்துரைத்து அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News