வாலாஜாபாத் : திமுக சார்பில் போட்டியிட்ட கணவன் - மணைவி இருவரும் வெற்றி

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கணவன், ஊராட்சி தலைவருக்குக்கு போட்டியிட மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2021-10-15 12:45 GMT

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.தேவந்திரன் - சுகுணா தேவேந்திரன் தம்பதியினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் காஞ்சிபுர மாவட்டத்தில் 5 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 7வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஆர்.கே. தேவேந்திரன் என்பவர் உதயசூரியன் சின்னத்தில், இதேபோல் விருப்பப்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு திமுக ஆசிபெற்ற வேட்பாளராக திருமதி சுகுணா தேவேந்திரன் போட்டியிட்டார்.

இவர்களது வாக்கு காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள சங்கரா கலைக் கல்லூரியில் கடந்த 12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கணவன் மற்றும் மனைவி இருவரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் திமுக மற்றும் அதிமுகவில் கணவன் மனைவி என போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News