வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 உறுப்பினர்கள் பதவியேற்பு
வாலாஜாபாத் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 15 உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி இரண்டு நகராட்சி , 3 பேரூராட்சியில் , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்பு நடைபெற்றது .
அவ்வகையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15 உறுப்பினர்களும் இன்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சி செயல் அலுவலர் மன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 இடங்களில் திமுக 10 இடங்களிலும் அதிமுக 5 எங்களுக்கும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.