வாலாஜாபாத் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று 86 சதவீத வாக்குப்பதிவு
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத் தேர்தலுக்காக ஒன்றியம் முழுவதும் 61 கிராம ஊராட்சிகளில் 232 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப் பட்டது.
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 50,845 ஆண் வாக்காளர்களும், 55,018 பெண் வாக்காளர்களும் , 7 இதர வாக்காளர்களும் என 1,05,870 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. உள்ளூர் கிராம ஊராட்சியில் மட்டும் மூன்று மணி நேரத்திற்கு பின் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
மாலை ஆறு மணி வாக்குபதிவு நிறைவுற்ற பின் 45266 ஆண் வாக்களர்களும் , 46,201 பெண் வாக்களர்களும் , 1இதர வாக்காளர் என 94,468 வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்துள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 89%, பெண் வாக்காளர்கள் 84 சதவீதமும், இதர 14 சதவீதமும் என சராசரியாக 86 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.