உத்தரமேரூரில் விதிமுறைகளை மீறியதாக கிராமஉதவியாளர் சஸ்பென்ட்
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கிராம உதவியாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு நன்நடத்தை விதிகள் குறித்து சுற்றரிக்கை அனுப்பி விதிகளை மீறுவோர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக இரு ஊராட்சி செயலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் உத்திரமேரூர் அடுத்த மானம்பதி கிராம உதவியாளர் குப்பன் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு மாலை அணிவித்து வரவேற்றதாக ஆதாரங்களுடன் தேர்தல் அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவரை மாவட்ட தேர்தல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது போன்ற செயல்கள் எல்லாம் பார்க்கும் நிலையில் அரசு ஊழியர்கள் கட்சி தொண்டர்களாகவே இருந்தால் என்ன நிலை மக்களுக்கு ? என கேள்வி எழுகிறது.