உத்திரமேரூர் : புதிய பேருந்து நிலையம் அமைக்க எம்எல்ஏ தலைமையில் ஆய்வு

Kanchipuram New Bus Stand -கடந்த சில தினங்களுக்கு முன் உத்திரமேரூரில் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, 'இன்ஸ்டா செய்தி'யில் வெளியானது. அதன் எதிரொலியாக, எம்எல்ஏ ஆய்வு நடந்தது,

Update: 2022-10-27 03:00 GMT

உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Kanchipuram New Bus Stand -தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து, 18 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர்  ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தொகுதிக்கு உட்பட்ட 10 கோரிக்கைகளை தெரிவித்த நிலையில், அதில் முக்கிய ஒன்றாக நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், உத்திரமேரூர் புறவழிச்சாலை பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்தக் கோரிக்கை குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு 'இன்ஸ்டா நியூஸ்' செய்தியில், சட்டமன்ற உறுப்பினரின் 10 கோரிக்கை எனும் தலைப்பில் செய்தி வெளியானது.

இந்நிலையில், உத்திரமேரூர் நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில் உத்திரமேரூர் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் என, ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் நகரில் பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்வதால் இந்நிலை ஏற்படுவதாகவும், மேலும் தாம்பரம்,  செய்யாறு, திருவண்ணாமலை, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை என உள்ளதால்,  இவ்வழியாக அதிக வாகன போக்குவரத்து பயணம் ஏற்படுவதால்  பெரும் நெரிசல் ஏற்படுவதை கணக்கில் கொண்டு தற்போதைய பேருந்து நிலைய  இடத்தை அருகிலுள்ள வேடபாளையம் பகுதியில் மாற்றம் செய்ய, சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆலோசனை வழங்கினார்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் புறவழிச் சாலையை இணைக்கும் வகையில், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கும் இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா,  ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் ஆகியோரின் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தப் பகுதியில்  5 ஏக்கர் அரசு  நிலம் காலியாக உள்ளது. மேலும் புதியதாக அமைக்கப்படவுள்ள புறவழிச்சாலையில் ஒட்டி உள்ளதாலும் , விவசாயிகள் அடிக்கடி வந்து செல்லும் விவசாய அலுவலகங்களும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கும் உள்ளதால் இந்த இடம் பேருந்து நிலையம் அமைக்க சிறந்த இடமாக இருக்கும் என, அனைவரும் கருதுகின்றனர்.

இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த பேருந்து நிலையத்தை மாற்றம் செய்யும் நிலையினை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், வாக்குகளும் கணிசமாகவே கிடைக்கும் என்பதும், தேர்தல் வெற்றி போல் இப்பகுதி மக்களின் வாக்குகளும் எளிதாக கிடைக்கும் என்றால் பணிகளை விரைவுப்படுத்த திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News