உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவி : கைப்பற்ற போவது யார் ?

உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி 18 வார்டுகளை வென்று வாகை சூட போகும் கட்சி எது என பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Update: 2022-01-28 12:30 GMT

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சி என பெயர் பெற்றது உத்திரமேரூர் பேரூராட்சி. இப்பேரூராட்சிப் பகுதியில் பல தொன்மையான கோயில்கள் மற்றும் சோழர்கள் காலத்திய  தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுக்களில் உள்ளது.

இப்பகுதியில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 25ஆயிரம் வசித்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற பேரூராட்சியாக விளங்குகிறது. மொத்த 18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சி தலைவர் பதவி பெண்கள் பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்சி பெண்கள் பிரிவில் ஒரு வார்டு உறுப்பினரும், , எஸ்சி பொது பிரிவில் ஒருவரும்,  பெண்கள் பொது பிரிவில் 8பேரும், பொதுபிரிவில் 8நபர்கள் என 18 தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூர் பேரூராட்சியில் 10546 பேரும், 11472 பெண்கள் , 1மூன்றாம் பாலினத்தவர் என 22019 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக‌ 9 பெண் வாக்குசாவடிகள், 9 ஆண் வாக்குசாவடிகள், இருபாலருக்கும்‌ 9 என மொத்தம்‌ 27 வாக்குசாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதில் 6 வாக்குசாவடிகள் பதட்டமான வை என கண்டறியப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பணியமர்த்தபடவுள்ளனர்.

இதில் வெற்றி பெற்று மகுடம் சூட போவது யார் எனும் பரபரப்பு  கூடியுள்ளது.

Tags:    

Similar News