உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா

கருட சேவை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது;

Update: 2022-04-12 13:30 GMT

கருடசேவை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள் கோவில் ஆண்டுப்பெருவிழா கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது, இந்த ஆண்டுப்பெருவிழாவானது கடந்த 10 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதின் முக்கிய நிகழ்வான கருடசேவை இன்று நடைபெற்றது. உத்திரமேரூர் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த மக்களால் நடத்தப்படும் இந்தநிகழ்ச்சியில் ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய விதிகள் வழியா வந்த ஸ்ரீ சுந்தர வரதராஜபெருமாள் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள் சன்னிதானத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு பக்தர்கள் தீபாரததனை செய்து வழிபட்டனர். அங்கிருந்து மீண்டும் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் சன்னிதியை வந்தடைந்தார்.

ஆங்காங்கே அன்னதானங்களும், நீர்மோரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக் கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News