உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி துவக்கி வைப்பு

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-06-27 12:45 GMT

உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக சி.டி.ஸ்கேன் இயந்திரம் இல்லாததால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றவர்கள் மிகவும் சிரமத்து ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் இன்று உத்திரமேரூர் மருத்துவமனையில் 16 லட்சம் மதிப்பில் புதிய சி.டி.ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உத்திரமேரூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்,சோழனூர் ஏழுமலை உள்ளிட்ட திமுகவினர் மருத்துவர்கள், செவிலியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News