உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடு மனுக்கள் பதிவேற்றம் மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-07-12 13:30 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் உத்திரமேரூர் வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்கள் அமைந்துள்ளது.

நாள்தோறும் பல்வேறு கோரிக்கைகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரடியாக வந்து மனுக்களை இது தங்கள் குறைகளை தீர்த்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீதும் வட்டாட்சியர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் அலுவலர்களின் வருகை பதிவேடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை, மக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை ஆகியவைகளின் நிலைகுறித்து கணினியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News