காஞ்சிபுரத்தில் 3 மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கு உளவியல் பயிற்சி
காஞ்சிபுரத்தில் 3 மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் உளவியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.;
காஞ்சிபுரத்தில் மூன்று மாவட்ட போலீசாருக்கு உளவியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
காவல்துறை உங்கள் நண்பன் எனும் வாசகத்திற்கு ஏற்ப கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை , ஊரடங்கு பணி, சட்டமன்ற தேர்தல் என பல தொடர்பணிகளுடன் , சட்டம்ஓழுங்கு பணி இருபத்தி நான்கு மணி நேரமும் பொதுமக்களின் நலன் காக்க பாடுபட்டதை மறக்க இயலாது.
தனது உடல்நலன் மற்றும் குடும்பத்தினரின் நலனை கூட அறிந்திராமல் பணியாற்றும் வந்த நிலையில், பல்வேறு தரப்பு மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து தங்கள் மனநிலையை ஒரு நிலையாக நிறுத்திக்கண்டு ஓரு வித மன அழுத்தத்தையும் வெளிக்காட்டாமல் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம். சத்தியபிரியா தனது எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து உடல்நிலை பேணிக் காக்கும் வகையில் பயிற்சி முகாம் 3 தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை துவங்கி வைத்தார்.
இம் முகாமில் டிஎஸ்பிகள் , காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள் என பலர் மன அழுத்தத்தை குறைக்கும் எளிய முறைகளை ஆலோசனைகளாக வழங்கினர்.
இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் காவல்துறை அலுவலர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் கையேடுகளை வழங்கி வரும் காலங்களிலும் மனமகிழ்ச்சியுடன் சிறப்பாக பணியாற்றிய வாழ்த்து கூறினார்.