பிளஸ் 1மாணவர்கள் 4 பேர் விடுதியிலிருந்து தப்பியோட்டம.
உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் இயங்கி வரும் கிறிஸ்துவ தனியார் பள்ளி விடுதி மாணவர்கள் தப்பிச்சென்றனர்;
உத்திரமேரூர் காவல்நிலையம் .
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் அடுத்த குப்பையைநல்லூர் கிராமத்தில் தனியார் கிருஸ்துவ நிறுவனத்தின் சார்பில் லயோலோ மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது.
இதில் படித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம் தும்பை பகுதியை சேர்ந்த ஆர் ஷாம்(16) , செய்யூர் தாலுகாவை சேர்ந்த கமலேஷ் (16) , சென்னையைச் சேர்ந்த வி. டேவின்(16) , சிங்கப்பெருமாள் கோயில் சேர்ந்த டி. மாணிக்கம்(16) ஆகியோர் தங்கி 11 வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணி அளவில் மாணவர்களின் எண்ணிக்கை சரிபார்த்த விடுதி ஆசிரியர் மேற்கண்ட நான்கு மாணவர்களும் இல்லாதது கண்டு நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். இது சம்பந்தமாக லயோலா மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதி இயக்குனர் அருட்தந்தை யூஜின் ஜெபஸ்டின் ரோசாரியோ லயோலா என்பவர் புகார் கொடுத்துச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக 4 மாணவர்களின் பெற்றோர்களும் புகார் கொடுக்க உள்ளனர். மேற்படி மாணவர்கள் ஹாஸ்டலில் தங்க விருப்பம் இல்லாமல் இருந்துள்ளனர் என தெரிய வந்துள்ளனர்.