கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் சேற்றில் சிக்கி பரிதாப பலி
காஞ்சிபுரம் அருகே, அங்கம்பாக்கம் கிராமத்தில் +2 பள்ளி மாணவன் கிணற்று சேற்றில் சிக்கி பலி ஆனார்.;
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சக்திவேல் (17). அவர், மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.
ஓராண்டு காலமாக விவசாயம் இல்லாத கிணறு என்பதால், சேறும் சகதியும் இருந்துள்ளது. இதை அறியாத மாணவர்கள் நீரில் குதித்த போது சக்திவேல் சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் மூச்சு திணறி உள்ளேயே சிக்கிக் கொண்டார். காணாமல் போனதால் உடன் வந்த நண்பர்கள் பதறிப்போய், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான குழுவினர், கிணற்றில் சிக்கி இருந்த சக்திவேலை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, அவரது உடல் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.