கொரோனா நோய் அகல கிராமங்களில் அம்மனுக்கு கூழ் வார்த்து சிறப்பு பூஜைகள்

ஊரடங்கு தளர்வு காரணமாக கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் கொரோனா நோய் அழிய வேண்டும், மழை பெய்ய வேண்டும் என பக்தர்கள் அம்மனுக்கு கூழ் வார்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர்.

Update: 2021-07-04 09:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதிகளில் கொரோனா நோய் தொற்றைப் போக்க அம்மன் கோயில்களில்  சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல்  தடுப்பு நடவடிக்கையாக  கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்தது.

தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கோவில்கள் சில தினங்களுக்கு திறக்கப்பட்டு  கொடிய கொரோனா நோய் அகல பல்வேறு ஹோமங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தற்போது திறக்கபட்டு பொதுமக்கள் மாலை வேளைகளில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் கிராமத்திலுள்ள குளக்கரை கங்கையம்மன் கோவிலில் இன்று அப்பகுதி  மக்கள் கொரோனா நோய் அகலும் , மழை மற்றும் சுகாதாரமான வாழ்கைக்கு வேண்டி கூழ் வார்த்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மேற்கொண்டனர்.

இதில் குறைந்தளவே பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகள் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News