கண் பார்வை குறைபாடு அதிகரிப்பு தொடர்பாக கிராமங்களில் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் அடுத்த காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2022-06-28 07:00 GMT

வேடல் கிராமத்தில் நடைபெற்ற இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் பரிசோதனை மேற்கொண்டபொதுமக்கள்.

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் காலூர் ஊராட்சி கிராமம் இணைந்து பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் தேடல் கிராம சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காலூர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி கண்பிரிவு முகாம் அலுவலர் டாக்டர்.எஸ்.வேலுச்சாமி தலைமையில் கண் மருத்துவர்கள் , பரிசோதகர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் பொதுமக்களை பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு கண் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளும் , சிலருக்கு கண்புரை வளர்ச்சி குறித்து அறிவுறுத்தப்பட்டு அவர்களுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது..

இதில் கலந்து கொண்ட மருத்துவர் வேலுசாமி தெரிவிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வீட்டில் இருந்ததால் தொலைக்காட்சி பார்த்தல்,  இளைஞர்கள் கணினி,  கைப்பேசி பழக்கம் அதிகரித்து  பலருக்கு கண் குறைபாடுகள் வந்துள்ளது.

ஆகவே வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் அந்தந்த கிராம ஊராட்சிகள் உடன் இணைந்து சிறப்பு பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் டில்லிபாபு சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News