சாலையில் கொட்டப்பட்ட மண் கழிவு; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
ஆர்ப்பாக்கம் அருகே சாலையின் நடுவே கொட்டப்பட்ட மண் கழிவுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ( கீழ் ரோடு) மாநில சாலையினை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் ஆர்ப்பாக்கம், மாகரல் கிராமத்தில் இருந்து மேற்பட்ட கல் அரவை தொழிற்சாலை இயங்கி வருகிறது. மேலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையினை இணைக்கும் சாலையாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் ஆற்பாக்கம்- மாநகரில் இடையே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் முன் மண் கழிவுகளை சாலையின் நடுவே கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.
கழிவுகள் முழுவதும் நீரு அடைந்துள்ளதால், சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக கடக்க நேரிட்டால் நிச்சயம் சாலை விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலையின் இருபுறமும் வாகனங்கள் விலகி செல்லும் போது வாகனங்கள் நிலை தடுமாறும் நிலை அதிகம் உள்ளதால் இச்செயலை செய்த லாரிகளை மாகரல் காவல்துறையினர் சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.