நூறு நாள் வேலை பணி அட்டை புதுப்பித்து வழங்க கோரி முற்றுகை போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அடையாள அட்டை புதுப்பித்து வழங்க கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.;
காஞ்சிபுரத்தில் ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்து வழங்கக்கோரி பி.டி.ஓ. வை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலையற்ற நபர்களுக்கு 100 நாள் பணி வழங்கப்படுகிறது.இதற்காக பணியாளர் பெயரில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது இந்த அடையாள அட்டையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது 100 நாள் பணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி கிராம ஊராட்சி செயலர் பணியாளரை உறுதிபடுத்தி அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல் இன்று பணி மேற்கொள்ள வந்த பணியாளர்களுக்கு அடையாள அட்டை புதுப்பிக்க வில்லை என்பதால் பணி வழங்க மறுத்ததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் வந்தால் மட்டுமே பேச்சு வார்த்தை நடைபெறும் என கூறியதை தொடர்ந்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து பணியாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பணி அடையாள அட்டை வழங்கப்படும் என உறுதியளித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக நூறு நாள் பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.அனைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு நாளை முதல் வழக்கம் போல் பணி மேற்கொள்ளலாம் என தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்