காஞ்சிபுரம் அருகே பழங்குடி இன மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை சமுதாயக் கூடத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பழங்குடி இன மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-08-11 14:00 GMT

பழங்குடியின மக்களுக்கு 5 கிலோ அரிசியை வழங்கும் காஞ்சிபுரம் வட்டார சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் நீதிபதியுமான திருஞானசம்பந்தம்

காஞ்சிபுரம் அருகேயுள்ள குருவிமலை சமுதாயக் கூடத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பழங்குடி இன மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.

முகாமிற்கு காஞ்சிபுரம் வட்டார சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் நீதிபதியுமான திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 78 பேருக்கு தார்ப்பாயும்,15 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி என நல திட்ட உதவிகளை வழங்கினார்.

காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பு இயக்குநர் ராஜீ வரவேற்று பேசினார். மூத்த வழக்குரைஞர் கீதா பழங்குடியின மக்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

நிறைவாக சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் அண்ணாமலை நன்றி கூறினார். ஏற்பாடுகளை தன்னார்வலர் ஜெயந்தி செய்திருந்தார்.

Tags:    

Similar News