200 ஆண்டுகளுக்கு பிறகு திருவாலீஸ்வரர் ஆலயத்தில் சஷ்டி திருக்கல்யாண விழா

காஞ்சிபுரம் அருகே ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீதிருவாலீஸ்வரர் திருக்கோயில் சஷ்டி திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது.;

Update: 2022-10-30 10:59 GMT

சிறப்பு அலங்காரத்தில் வாலாஜாபாத் வட்டம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் உ்ள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை  திருவாலீஸ்வரர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ,  வாலாஜாபாத் வட்டம் , சிங்காடிவாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இவ்வாலயம் பல சிறப்புகளை உடையது. விவசாய நிலத்தில் ஏர் உழும் ஏர் கலப்பை பட்டு இறைவன் வெளிவந்ததால்  இன்றும் இறைவன் மீது ஏர் கலப்பை பட்ட தழும்பு உள்ளது.

இத்தலத்து இறைவனை எந்த ஸ்தபதியும் உளி கொண்டு வடிக்கவில்லை.தன்னைத்தானே தோற்றுவித்த தான் தோன்றிய (சுயம்பு)பெருமானை வாலி வழிபாடு செய்துள்ளார்.ஆகையால் இறைவனுக்கு வாலீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

மேலும் திருமால் மற்றும் எமதர்மன் இருவரும் வழிபாடு செய்துள்ளனர்.    சதுர ஆவுடையாரில் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தி இவை மூன்றும் இணைந்து வேறு எங்கும் காண முடியாத சிறப்பும் கொண்ட ஆலயம் .

மேற்கு நோக்கிய ஆலயம் இறைவனுக்கு நேர் எதிரே ரிஷி தீர்த்தம் உள்ளது இறைவனை வழிபாடு செய்த சப்தரிஷிகளும் லிங்க வடிவில் இன்றளவும் திருக்குளத்தில் காட்சி தருகிறனர்.

மேலும் காசி இராமேஸ்வரம் சென்று ஹோமம் செய்ய இயலாதவர்கள் இவ்வாலையத்து குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தால் பித்ருசாபம் நிவர்த்தி அடையும் என்று தேவபிரசன்னம் கூறுகின்றது .

இவ்வாலையத்தில் நவக்கிரகமும் சிறப்பு வாய்ந்தவை மற்ற ஆலையங்களில் நவகிரகங்களிள் 9 சிலைகள் மட்டுமே இருக்கும். ஆனால் இவ்வாலையத்தில் 11 சிலைகள் இருப்பது மேலும் சிறப்பு .

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சூரியன் ஒளி வடிவில் மூலவரை வழிபாடு செய்து வரும் நிகழ்ச்சி ( சூரியகதிர் இறைவன் மீது படுதல்) இவையும் சிறப்பு மேலும் தமிழகத்தில் 72 இடங்களில் மட்டுமே காணப்படும். கொற்றவை ( மூத்ததேவி) சிலை இவ்வாலயத்தில் உள்ளது சிறப்பு.  இவ்வூர் அருகில் அமைந்துள்ள சேக்கான் குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள கல்வெட்டில் 1542 ல் சந்திரகிரி ராஜ்ஜியத்தில் இவ்வூர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் பல சிறப்புகளை உடையது இவ்வாலையம்.

இவ்வாலயத்தின் 200 ஆண்டுகளுக்குப் பிறகு கந்த சஷ்டி பெருவிழா நடைபெறுவதாகவும் கடந்த 25ஆம் தேதி கொடியேற்றம் கண்டு நாள்தோறும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.

நாளை 4 மணிக்கு கிராம மக்களின் சீர்வரிசை மேல தாளம் முழங்க திருக்கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு , பெண் அழைப்புடன் முருகப்பெருமானுக்கு சஷ்டி பெருவிழாவை ஒட்டி திருமண உற்சவம் நடைபெறுகிறது. இதன்பின் திருக்கல்யாணத்தில் முருகப்பெருமானின் எழுந்தருளி கிராம வீதி உலாவும் நடைபெற உள்ளது.

நீண்ட பல நூறு ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் கோலாகலமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  இத்திருக் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை புனரமைப்பு மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

Tags:    

Similar News