ஊரக ஊராட்சி தேர்தல் : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது;
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தில் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாலாஜாபாத் பகுதியில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வாக்கு சேகரித்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், காமராஜ், கோகுலஇந்திரா மற்றும் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.